News

ஆர்யாவை தூக்கிவிட களமிறங்கும் ஜீவா

ஆர்யா நடிப்பில் வெளியான ‘புறம்போக்கு’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க’, ‘யட்சன்’, ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ஆர்யாவின் கைவசம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீமேக் இருக்கிறது. இதில் ஆர்யாவுடன் ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தனி ஹீரோ கதையம்சம் உள்ள படங்கள் இல்லாதநிலையில், வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் ஆர்யா. இதற்காக ஆர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை ஜீவா தனது சூப்பர் குட்பிலிம்ஸ் சார்பாக தயாரிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்தை விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் இயக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top