News

சமந்தாவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது

விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சமந்தாவின் நீண்ட நாள் கனவு, பழம்பெரும் நடிகை ரேவதியுடன் நடிக்க வேண்டும் என்பது. இந்த கனவு தற்போது நிறைவேறியிருப்பதாக சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இன்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவால் ‘மண்வாசனை’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல், ரஜினி,  உள்பட பலருடன் நடித்து கோலிவுட்டின் சிறப்பான நடிகை என்று பெயர் பெற்ற நடிகை ரேவதியுடன், சமந்தா தற்போது ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பர படத்தின் போட்டோஷூட் நேற்று நடைபெற்றது.

இந்த விளம்பரத்தில் அவருடன் நடித்த படப்பிடிப்பு தனக்கு மிகவும் ஸ்பெஷலான ஷூட்டிங் என்று, சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமந்தா தற்போது சூர்யாவுடன் ’24’, விஜய்யுடன் ‘விஜய் 59’, மகேஷ்பாபுவுடன் பிரமோத்சவம் ஆகிஅ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top