News

சரத்குமார், ராதாரவி நீக்கம். பொதுக்குழுவில் நடந்தது என்ன..?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு நேற்று கூடியது. அடிதடி கலாட்டாக்களுடன் சங்க கூட்டம் நடந்தாலும் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட நிரந்தரமாக நீக்கப்பட்டது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள், உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. அதன் முழுவிபரங்கள் வருமாறு:

* பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டும் அதுபற்றி கேட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்காமல் இருக்கும் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், சரத்குமார், ராதாரவி ஆகியோர் செயற்குழுவால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள்.

* சங்க உறுப்பினர்களுக்கான ஓய்வுதியத்தை உயர்த்துவதோடு வயது வரம்பும் தளர்த்தப்படுகிறது.

* சங்கத்தோடு எந்த தொடர்பும் இல்லாத 67 உறுப்பினர்களுக்கு அவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையை புதுபிக்க கடைசி வாய்ப்பாக பத்திரிக்கை விளம்பரம் கொடுப்பது. அதன் பிறகும் அவர்கள் புதுப்பிக்கவில்லை என்றால் சங்கத்தை விட்டு நீக்குவது.

* சங்கத்திற்கு புதிய கட்டம் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சிம்டிஏ அனுமதி கிடைத்ததும். டெண்டர் விடப்பட்டு கட்டிட பணி தொடங்கப்படும். 3 ஆண்டு காலத்திற்குள் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது.

* சங்க அறக்கட்டளை விதிமுறையில் திருத்தம் செய்து தங்களை நிரந்தர அறங்காவலர்களாக நியமித்துக் கொண்ட முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை அறக்கட்டளையிலிருந்து நீக்குவது.

* சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சங்க விதிகளுக்கு முரணாகவும், எதிராகவும் நடப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது.

* தற்போது சங்கத்தில் 8.5 கோடி ரூபாய் இருப்பில் உள்ளது. மேலும் நிதி திரட்ட திரைப்படம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முயற்சிப்பது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய சீனியர் நடிகர்களும், அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் கமல்ஹாசன் ஸ்கைப் மூலம் பொதுக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top