News

பல்கேரிய போலீசிடம் சிக்கிய சில்வாவை அஜித் காப்பாற்றினாரா?

வழக்கமாக அஜித் பட செய்திகள், அஜித்தின் புதிய ஸ்டில்கள்தான் டிரெண்டில் இருக்கும். ஆனால் தற்போது ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவை பல்கேரிய போலீஸிடம் இருந்து அஜித் காப்பாற்றியதாக ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி டிரெண்டில் உள்ளது.

பல்கேரியாவில் தற்போது நடைபெற்று வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்த ஸ்டண்ட் சில்வா திடீரென நாடு திரும்பியுள்ளார். பல்கேரிய போலீஸிடம் சில்வா ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாகவும், அதற்காக சில்வா கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஜித் உடனே தனக்கு தெரிந்தவர்கள் மூலம் சில்வாவை காப்பாற்றி உடனே இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் வதந்தி பரவி வருகிறது.

இதுகுறித்து சில்வா கூறியபோது, ‘ரஜினியின் ‘2.0’ படத்தின் பணி இருந்ததால் அஜித்திடன் அனுமதி பெற்று பல்கேரியாவில் இருந்து கிளம்பி வந்தேன். ஆனால் இங்கு என்னென்னவோ வதந்தி பரவுகிறது. இதை கேள்விப்பட்டால் அஜித்தே சிரிப்பார். ஏன் என்னை பற்றி இப்படி ஒரு வதந்தியை கிளப்புகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை’ என்று கூறினார்.

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top