News

மற்றுமொரு சிறுவர்கள் சினிமா

ஈரானிய படங்களைப் போன்று சமீபகாலமாக தமிழ் சினிமாவும் சிறுவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களின் உணர்வுகளை கொண்டு வருகிறது. அல்லது அவர்களை வசீகரிக்கிற படங்களை கொடுக்கிறது. பசங்க படத்தில் இதனை பாண்டிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவரே மெரீனா படத்தில் தொடர்ந்தார்.

வஜ்ரம், பள்ளிக்கூடம் போகாமலே, உ போன்ற படங்கள் குழந்தைகள் படமாக அமைந்தது. அதற்கு பிறகு காக்கா முட்டை இரண்டு சேரி சிறுவர்களின் உலகத்தை காட்டியது, குற்றம் கடிதல் ஒரு பள்ளி சிறுவனுக்கு என்ன மாதிரி கல்வி வேண்டும் என்று பேசியது.

வர இருக்கிற பசங்க 2 நகர்புற குழந்தைகளுக்கு படிப்பு சுமையால் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச இருக்கிறது. மாயாபுரி 3டி, ஜம்போ 3டி, குட்டி பட்டாளம், சாப்ளின் சாமந்தி போன்ற படங்கள் குழந்தைகளை குதூகலிக்க வைக்க இருக்கிறது.

இந்த நிலையில் அழகு குட்டி செல்லம் என்ற மற்றுமொரு சிறுவர் படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை இயக்கி வரும் அந்தோனி திருநெல்வேலி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரது நண்பர் சார்லஸ் இயக்கி உள்ளார்.

தம்பி ராமய்யா, ஜான்விஜய், ஆடுகளம் நரேன், கருணாஸ், அங்காடி தெரு மகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். வேத் சங்கர் இசை அமைத்துள்ளார், விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார், தவறான தங்கள் பெற்றோர்களை குழந்தைகள் திருத்துகிற கதை. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. விரைவில் வெளிவர இருக்கிறது.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top