News

மோடிக்கு ஐடியா கொடுத்த பிச்சைக்காரன்…

500 1000 Notesபிச்சைக்காரன் படத்திற்கு முன்பே, சிவாஜி படத்தில் சுஜாதா-ஷங்கர் சொல்லி அடித்த மேட்டர். அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவிப்பது போலவும், ஒரு மாதம் அவற்றை மாற்ற அவகாசம் அளிப்பது போலவும் கடைசியில் டைட்டில் ஸ்லைடில் வரும். அதன்பிறகு நிறைய கறுப்புப் பணம் வெளியே வந்தது என்றெல்லாம் எழுத்துகள் ஓடும். நடக்குமா, நடக்காதா, தேவையா இல்லையா என்ற சீரியஸ் விவாதங்களை அப்புறம் வைத்துக் கொள்வோம். திடுதிப்பென்று நேற்று இரவு மோடி அறிவித்தே விட்டார்.

சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திலும் இதைச் சொல்லும் காட்சி வந்தது. அந்தக் காட்சிதான் பலரது வாட்ஸ் அப்பில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. ’ராஜா மெய்யப்பன்’ என்ற பிச்சைக்காரனாக நடித்திருக்கும் இயக்குநர் கோவிந்தமூர்த்தி, ‘இந்தியாவுல ஏழைகளே இல்லாம இருக்க ஒரே வழி.. ஐநூறு ரூவா, ஆயிரம் ரூவா நோட்டை ஒழிக்கறதுதான்’ என்று ரேடியோ ஜாக்கி ஒஃபீலியாவிடம் சொல்வார். ஏதோ ஃபைனான்ஸ் அனலிஸ்ட் சொல்றார் என்று எல்லாரும் கேட்க, ரேடியோ ஸ்டேஷனில் வந்திருக்கும் கெஸ்ட், ‘இந்த மாதிரி ஆளுதான் நம்ம நாட்டுக்கு ப்ரைம் மினிஸ்டரா இருக்கணும்’ என்பார்.

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top