News

மோடியின் அதிரடிக்கு திரைப்பிரபலங்களின் ரியாக்‌ஷன்ஸ் !

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும் சாதாரண பொதுமக்கள் தொடங்கி அரசியல் கட்சியினர், பொருளாதார நிபுணர்கள்…. என பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திரைத்துறையில் இருக்கும் பலரும் பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில்… ‛‛ஹாட்ஸ் ஆப் நரேந்திர மோடிஜி. புதிய இந்தியா பிறந்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

நடிகர் கமல் தன் டுவிட்டர் பக்கத்தில்…. ‛‛சல்யூட் மிஸ்டர் மோடி. இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கொண்டாட வேண்டும், குறிப்பாக முறையாக வரி செலுத்துவோர்” என்று கூறியுள்ளார்.

நடிகர் விஷால் தன் டுவிட்டர் பக்கத்தில்… ‛‛மோடி ஜி மாஸ்டர் ஸ்ட்ரோக், புதிய இந்தியாவை கொண்டு வாருங்கள், இதை ஏற்று கொள்ள கொஞ்ச காலமாகும், புரட்சி” என்று கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில்… ‛‛அற்புதமான நடவடிக்கை, வரலாற்று சிறப்புமிக்கது, ஜெய்ஹிந்த், இந்தியனாக இருப்பது பெருமை” என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் தன் டுவிட்டர் பக்கத்தில்… ‛‛டியர் மிஸ்டர் நரேந்திர மோடி. நீங்கள் ஒரு ஜாம்பவான் சார். தேசபக்தி உள்ள அனைத்து இந்தியனும் இன்று இரவு நன்றாக தூங்குவார்கள். இந்த நாளுக்காக நன்றி சார். சுத்தமான இந்தியா, ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில்… ‛‛வட போச்சே…. கறுப்பு பணம் போச்சே… சூப்பர்” என்று கூறியுள்ளார்.

இதேப்போன்று கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என பல திரையுலகினரும் பிரதமரின் இந்த நடவடிக்கையை வரவேற்றும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top