News

வீரம் சிவாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அஜித்?

வீரம் படம் சென்ற ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆனது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடமே அஜித் மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை வீரம் சிவாவிற்கு  கொடுத்தார். இதோ வெளியாக இருக்கிறது வேதாளம்.

அஜித் ஸ்ருதிஹாசன் , லட்சுமி மேனன், சூரி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாக உள்ள இப்படத்தைப் பார்த்த அஜித் மகிழ்ச்சியுடன் சிவாவிடம், நாம் அடுத்து உடனே ஒரு படம் பண்ணலாம் எனக் கூறியுள்ளாராம். அண்ணன் தம்பிகள் கதைக்களமாக வீரம் வெளியானது, அதே போல் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வேதாளம் வெளியாக இருக்கிறது.

வீரம் தயாரானவுடன் படத்தைப் பார்த்த அஜித் அடுத்து ஒரு படம் உடனே பண்ணலாம் எனக் கூறினார், இப்போது மீண்டும் ஒரு படம் பண்ணலாம் எனக் கூறியுள்ளார். அடுத்த படம் எப்போது, என்ன படம் என்பதை அஜித் தான் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார் சிவா.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top