News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நயன்தாரா செய்த உதவி

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், பலர் உடமைகள் இழந்து தவித்து வருகிறார்கள். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நடிகர் சங்கமும், தமிழ் சினிமா நட்சத்திரங்களும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். மற்ற மொழி நடிகர்களும் நடிகர் சங்கத்துடன் இணைந்து கைகோர்த்து பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் ராணா சென்னை தெருக்களில் இறங்கி குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறார்.</p><br /><p>மிக குறைந்த சம்பளம் வாங்கும் வளரும் நடிகையான ஸ்ரீதிவ்யா 10 லட்சம் நிவாரண தொகை வழங்கி எல்லோர் புருவத்தையும் உயர வைத்திருக்கும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பல கோடிகள் சம்பளம் வாங்கும் நயன்தாரா இதுவரை எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாமல் இருந்தது. தற்போது அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நம்பாமல், அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பாமல் ஒரு மலையாள பத்திரிக்கையுடன் இணைந்து வெள்ள நிவாரண பணியில் இறங்க போவதாக செய்திகள் வந்திருக்கிறது.

இதுபற்றி அவர் அந்த பத்திரிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எனக்கு இரண்டாவது வீடு, தமிழ் பெண்கள் அனைவரும் என் சகோதரிகள். மழை வெள்ளத்தால் அவர்கள் வாழ்க்கை புரட்டிபோடப்பட்டுவிட்டது. உணவும், உடுத்த மாற்றுத் துணியும் இல்லாமல் அவர்கள் கஷ்டப்படுவதை அறிந்து மனவேதனை அடைந்தேன். நான் சென்னையில் இருந்து வெகுதூரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் உடனே ஓடிவந்து உதவும் நல்ல உள்ளங்களுடன் இணைய முடியவில்லை. அவர்களுக்கு உதவுவதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நயன்தாரா, Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 1000 பேருக்கு உதவக்கூடிய இந்த உதவி பொருட்கள், உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப்பட்ட பொருட்களாகும்.

Click to comment

Most Popular

Copyright © 2015 Cine Bix.

To Top